நிர்மலா சீதாராமனின் அருணாசலப்பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு

நிர்மலா சீதாராமனின் அருணாசலப்பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு
நிர்மலா சீதாராமனின் அருணாசலப்பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு

அருணாச்சலப் பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அன்ஜாய் மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகளை நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்சைகளுக்கு தீர்வு காண இருநாட்டு தரப்பினரும் முன் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹுனா சுயிங் கூறுகையில், கிழக்கில் உள்ள இந்திய சீன எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் நிர்மலா சீதாராமன் வருகை புரிவது அமைதிக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்தார். 

கடந்த மாதம், சிக்கிம் மாநிலத்தில் இந்திய-சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com