\
China objects to India's naming of 28 strategic locations in Ladakh
ladakhReuters

கை வெச்சா அவ்வளவுதான்.. மிரட்டல் விடுக்கும் சீனா..? பறிபோகுமா இந்திய எல்லை நிலங்கள்?

லடாக்கில் உள்ள 28 இடங்களுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியிருப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஒரு நாட்டின் எல்லைப் பரப்பை இன்னொரு நாட்டிடம் பகிர்ந்துகொள்ள பெரும்பாலான நாடுகள் ஒப்புக் கொள்வதில்லை. தங்களது எல்லை என்ன என்பதை நிர்ணயித்துக் கொள்ளும் நாடுகள், வேறொரு நாட்டினர் அதனைப் பங்கு போட முயன்றால், அதற்கு கடும் எதிர்விணைகளை ஆற்ற முயல்வது வழக்கம். இதுமாதிரியான பிரச்னை, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டுவதையும், உரிமை கோருவதையும், மத்திய அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும், எது இந்தியாவின் பகுதி என்பதை உறுதி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

india and china
india and chinaReuters

இந்த நிலையில், லடாக்கில் உள்ள கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்க், கானிஷ்கா சிகரம் உள்ளிட்ட 28 இடங்களுக்கு, கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி அன்று, இந்தியா அதிகாரப்பூர்வமாக பெயர்களை அறிவித்திருந்தது. அதிகாரப்பூர்வ வரைபடங்களில் இடங்களை தெளிவாகக் குறிப்பிடவும், எல்லைப் பகுதி குறித்த விழிப்புணர்வை அதிகாரிக்கவும், இந்த நடவடிக்கை உதவும் என்று இந்தியா எதிர்பார்த்திருந்தது.

China objects to India's naming of 28 strategic locations in Ladakh
மீண்டும் சீனா - இந்தியா எல்லை பிரச்சனை? ரகசிய ஆவணம் தாக்கல் செய்ததா லடாக் காவல்துறை?

ஆனால், இந்த நடவடிக்கைக்கு சீனா அரசு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் தெரிவித்துள்ள சீனா, அந்தப் பகுதிகள் அனைத்தும் தங்களுக்குச் சொந்தமானவை என்றும் உரிமை கோரியுள்ளது.

இந்தியா உருவாக்கிய லடாக் யூனியன் பிரதேசத்தை அங்கீகரிக்காத சீனா, இந்திய-சீனா எல்லையின் மேற்கில் உள்ள பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்ந்து நீடிப்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

China objects to India's naming of 28 strategic locations in Ladakh
‘பிரச்னையை தூண்ட வேண்டாம்’ - எல்லை மீறியதாக இந்தியாவை குற்றஞ்சாட்டும் சீனா..!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com