ai robots
ai robotsweb

’போர்க்களத்தில் AI ரோபோக்களால் மனிதர்களை போல செயல்பட முடியாது’ - சீனா ராணுவம்

ஏஐ தொழில்நுட்ப மனித வடிவிலான ரோபோ தயாரிப்பில் முன்னனியில் உள்ள சீனா கூறியுள்ள கருத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Published on

மனிதர்களை போன்று ஏஐ ரோபோவால் போர்களத்தில் செயல்பட முடியாது என சீன ராணுவம் கூறியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு மாற்றாக இருக்கக் கூடாது எனவும் சீன ராணுவ நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

AI
AI

போர் களத்தில் மனிதர்களால் மட்டுமே சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க முடியும் என்றும், ஏஐ ரோபோவால் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு மட்டுமே செயலாற்ற முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவ ஆராய்ச்சிக்குழு ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் சூழலில், இந்த கருத்து வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com