மகளை கடித்த நண்டை பழிவாங்க உயிருடன் விழுங்கிய நபர்.. ஆனால் பழிவாங்கியது யார் தெரியுமா?

மகளை கடித்த நண்டை பழிவாங்க உயிருடன் விழுங்கிய நபர்.. ஆனால் பழிவாங்கியது யார் தெரியுமா?
மகளை கடித்த நண்டை பழிவாங்க உயிருடன் விழுங்கிய நபர்.. ஆனால் பழிவாங்கியது யார் தெரியுமா?

சீனாவில் தனது மகளை கடித்த நண்டை பழிவாங்க உயிருடன் கடித்து சாப்பிட்டருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு சீனாவின் ஜெஜியாங்கைச் சேர்ந்தவர் லூ(39). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிர உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அவரை முதலில் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மார்பு, வயிறு, கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில் நோய்த்தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் நோய்த்தொற்றுக்கான காரணம் என்னவென்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஏதேனும் அசாம்பாவிதம் நடந்ததா என்பது குறித்து அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோதும் அனைத்துக்கும் இல்லை என்று மட்டுமே பதிலளித்துள்ளார் மிஸ்டர் லூ.

அவரிடம் ஏதேனும் அழற்சியை ஏற்படுத்தும் உணவுகளை அவர் உண்டாரா என்பது குறித்தும் மருத்துவர்கள் தொடர் கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர் மருத்துவமனையின் செரிமான மண்டல சிகிச்சைப்பிரிவில் வைத்து லூவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் லூவின் மனைவிதான் முதன்முதலில் லூ நண்டை உயிருடன் சாப்பிட்ட சம்பவத்தை மருத்துவரிடம் கூறியுள்ளார். அதன்பிறகுதான் லூ தான் செய்த செயலை மருத்துவரிடம் ஒத்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து லூவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் காயோ குயான் கூறுகையில், ‘’நான் அவரிடம் ஏன் உயிருடன் நண்டை சாப்பிட்டீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு, தனது மகளை கடித்த நண்டை பழிவாங்க வேண்டும் என அவர் நினைத்ததாகக் கூறினார். தனது மகளை நண்டு கடித்தவுடன் அதை உயிருடன் பிடித்து அப்படியே விழுங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தனது மகளை கடித்த நண்டை பழிவாங்கவே அவர் அப்படி செய்ததாகவும் அவர் கூறினார். அதன்பிறகே லூவின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் நண்டை உயிருடன் விழுங்கியதில் மூன்று ஒட்டுண்ணிகள் உடலுக்குள் சென்றதுதான் பிரச்னை என்பது தெரியவந்தது. நோய்த்தொற்றுக்கான காரணம் கண்டறியப்பட்டதால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. திங்கட்கிழமை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்’’ என்று கூறினார். மேலும் அவர் முறையாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com