\
China Launches ₹6.5 Crore Space Tourism Package
விண்வெளி பயணம்Chat Gpt

விண்வெளிக்கு ’சுற்றுலா பேக்கேஜ்’ சீனா நிறுவனத்தின் அதிரடி பிளான்.. ஆனால், இத்தனை கோடியா?

சீனாவின் டிரிப்.காம் நிறுவனம், அமெரிக்க விர்ஜின் கேலக்டிக் இணைப்பில் பொதுமக்களுக்கு விண்வெளி சுற்றுலா பேக்கேஜ் அறிவித்துள்ளது.
Published on

விண்வெளிக்குச் சென்று பூமியை மேலிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில், சீனாவைச் சேர்ந்த பயண நிறுவனம் ஒன்று ”விண்வெளி சுற்றுலா பேக்கேஜ்” அறிவித்துள்ளது. எனினும், இந்தப் பயணத் திட்டத்தின் செலவும், பாதுகாப்பும் குறித்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கின்றன.

சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் பயண நிறுவனமான டிரிப்.காம் (Trip.com), பொதுமக்கள் விண்வெளியில் பயணம் மேற்கொள்வதற்கான சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic) நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் நிலையில், இதில் பயணிக்க ஒருவருக்கு சுமார் 51 லட்சம் சீன யுவான் (yuan), அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி
விண்வெளிReuters

மொத்தம் 6 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்தில், விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பு பயணிகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள லாஸ் க்ரூசஸ் (Las Cruces) நகரில் இந்தப் பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருகிறது. பின்னர், பயணத்தின் 5-வது நாளில், விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுமார் 90 நிமிடங்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப்படும். மேலும், இந்தப் பயணத் திட்டத்தில் விண்வெளிப் பயிற்சி, தங்குமிடம், போக்குவரத்து, விண்வெளி உடை உள்ளிட்டவை வழங்கப்படுவதுடன், விண்வெளிப் பயணத்தை நினைவுகூரும் வகையில் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பிற நினைவுப் பொருட்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

China Launches ₹6.5 Crore Space Tourism Package
'இவ்வளவு கம்மியா தர்றாங்களா..' ஐபோன் விலையில் அதிரடி மாற்றம்.. இந்தியர்களை இழுக்கும் துபாய்!

ஆனால், அமெரிக்காவுக்குச் சென்று வருவதற்கான விமானக் கட்டணம், விசா மற்றும் தனிப்பட்ட காப்பீடு உள்ளிட்ட சில செலவுகளை பயணிகளே ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தப் பயணத்திட்டத்தில் இதுவரை 2 வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், விண்வெளிப் பயணம் என்ற கனவை நனவாக்கும் இந்தத் திட்டத்தின் விலை குறித்தும், பாதுகாப்பு சவால்கள் குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

China Launches ₹6.5 Crore Space Tourism Package
ஜப்பானை நெருங்கும் பேராபத்து.. 168 கிமீ வேகத்தில் நகரும் அரக்கன்.. ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com