ஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு

ஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு
ஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு

டோக்யோவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், சீன அதிபர் ஸீ ஜின்பிங் கூட்டாக சந்தித்து பேசினர். 

அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதித்தது. இதையடுத்து வட கொரியாவுக்கு பொருளாதார தடைகளை உலக நாடுகள் விதித்தன. இந்நிலையில், தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. மோதல் போக்கை கைவிட்டு நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் அறிவித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

இதனையடுத்து, சீனா, ஜப்பான், தென் கொரியா நாடுகளிடையே ஆன சந்திப்பு டோக்கியா நகரில் இன்று நடைபெற்றது. அப்போது அணு ஆயுத சோதனையை கைவிடும் வடகொரியாவின் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு என ஒப்பந்தம் கையெழுத்தானது. கிழக்கு ஆசிய பகுதியில் சுதந்திரமான வர்த்தகம் நடைபெறுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டன.

இதனிடையே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்-னை சந்தித்து பேசினார். அபேவின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதித்தனர். முன்னதாக மூன் ஜே இன் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கையும் சந்தித்துப் பேசினார்.‌ 

இதனையடுத்து, ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை விரைவில் சந்தித்துபு் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணுஆயுத விவகாரங்கள், வட கொரிய சிறையில் வாடும் ஜப்பானிய கைதிகள் விவகாரம் போன்றவை சுமுகமாக தீர்க்கப்படும் பட்சத்தில் அந்நாட்டுடன் சிறப்பான உறவை ஜப்பான் தொடரும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com