உலகம்
எடை கூட்டுவதற்காக மீன்களுக்கு ரசாயன ஊசி போடும் சீனா
எடை கூட்டுவதற்காக மீன்களுக்கு ரசாயன ஊசி போடும் சீனா
சீனா பல்வேறு பொருட்களை உலக நாடுகள் முழுவதும் ஏற்றுமதி செய்கிறது. இறைச்சி உணவு, மீன்கள் போன்ற உணவு வகைகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சீனாவில் இருந்து பிரேசில் நாட்டுக்கு அதிக அளவில் மீன்கள் ஏற்றுமதி செய்கின்றனர். அப்படி அனுப்பப்பட்ட மீன்களை சாந்தா கதரினா என்ற இடத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். அந்த மீன்களை பிரேசில் விவசாய துறை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தார்கள். அதில், கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மீனின் எடையை கூட்டுவதற்காக மீன் உடலில் ஊசி மூலம் தண்ணீர் மற்றும் ரசாயன கலவைகளை செலுத்தி இருந்தனர். இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய ரசாயனங்கள் என்று விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சீனா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க பிரேசில் போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.