சீன அரசு அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதால் அங்கு மீண்டும் ஒரு பொதுமுடக்கம் அமலாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பூஜ்ய கொரோனா பாதிப்பு என்ற கொள்கையில் செயல்பட்டு வரும் சீன அரசு, ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டால் கூட அந்த நகரத்துக்கே பொதுமுடக்கத்தை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளது. சீனாவில் ஏற்கெனவே மூன்று நகரங்கள் பொதுமுடக்கத்தில் உள்ளன. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.