கருத்தடை சாதனங்களுக்கு 13% வரி விதித்த சீனாweb
உலகம்
சீனா| குறைந்துவரும் பிறப்பு விகிதம்.. கருத்தடை சாதனங்களுக்கு 13% வரி விதிப்பு!
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதை தடுக்க 30 ஆண்டுகளாக இருந்த கருத்தடை சாதனங்களுக்கான வரி விதிப்பை நீக்கியுள்ளது சீன அரசு.
சீனாவில் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசு முனைப்புகாட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களுக்கு 13% வரிவிதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகமாக இருந்ததால் கருத்தடை சாதனங்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக சீனாவில் வரி விலக்கு இருந்தது. தற்போது நிலைமை மாறியுள்ளதால் அவற்றுக்கு அரசு வரி விதிக்கத்தொடங்கியுள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என அஞ்சும் சீனா, குழந்தை வளர்ப்பு, கல்விச்செலவுகளை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனினும் கருத்தடை சாதனங்களுக்கு வரிவிதிப்பால் அவற்றின் பயன்பாடுகுறைந்து பாலியல் நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருததுவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

