சீனாவில் வாட்ஸ் அப் பயன்படுத்த புதிய நிபந்தனைகள்!!!

சீனாவில் வாட்ஸ் அப் பயன்படுத்த புதிய நிபந்தனைகள்!!!

சீனாவில் வாட்ஸ் அப் பயன்படுத்த புதிய நிபந்தனைகள்!!!
Published on

சீனாவில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் ஒரு சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்த மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உடன் தற்போது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தவும் கட்டுபாட்டினை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களில சீனாவில் பலமுறை வாட்ஸ் அப் பயன்பாடு தடைப்பட்டது. வாடிக்கையாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி முழுமையான என்க்ரிப்ஷன் வசதியை வழங்குகிறது. 

சீனாவின் கிரேட் ஃபயர்வால் மூலம் சைபர் துறை சார்ந்த நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வரும் சீன அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் இடையூறை ஏற்படுத்துவதைத் தொடர்ந்து கூறிவந்தனர்,  எனினும் சர்வதேச சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாட்ஸ்அப் பயனர்கள் எவ்வித இடையூறையும் சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளனர். சீனாவில் பேஸ்புக் செயலிக்கு 2009-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com