”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” - சீன வெளியுறவுத்துறை

”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” - சீன வெளியுறவுத்துறை
”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” - சீன வெளியுறவுத்துறை

சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவாக, ஆண்டுக்கு 700 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது மொத்த உற்பத்தித் திறன் 550 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், மக்கள் எதிர்ப்பு காரணமாக முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த சரியான தகவல்களைத் தெரிவிக்க சீன அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தைத் தொடங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான சீனர்களும், வெளிநாடுகளுக்குச் செல்ல பதிவு செய்து காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்குப் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com