கொரோனா வைரஸ்: நம்பிக்கை இழக்காமல் போராடும் சீனா !

கொரோனா வைரஸ்: நம்பிக்கை இழக்காமல் போராடும் சீனா !
கொரோனா வைரஸ்: நம்பிக்கை இழக்காமல் போராடும் சீனா !

புதுமையையும், வித்தியாசத்தையும் கொடுக்கும் மந்திரக்காரர்கள் சீனர்கள்‌. இப்படிப்பட்ட சீனர்களுக்கு பெரும் சவாலாக வந்தது கொரோனா. இந்த கொடூர நோய் பிடியில், சீனாவுக்கு பதில் வேறு நாடுகள் சிக்கியிருந்தால் மக்கள் தொகையில் பாதியை பறிகொடுத்திருக்கும். ஆனால் சீனா, கடந்த 3 மாதங்களாக வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறது.

கொரோனா வைரஸ் பிறநாடுகளில் தாக்கியிருந்தால், மருத்துவமனைகளில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் சீனா பத்தே நாட்களில் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 2 ஆயிரத்து 300 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகளை கட்டி முடித்தது.

கொரோனா வைரஸ் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு எளிதாகவும் வேகமாகவும் பரவுவதை அறிந்த சீனா, மனித செயல்பாடுகளை குறைத்து, மருத்துவமனைகளை சுத்தப்படுத்துவது முதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொடுப்பதுவரை அனைத்தையும் ரோபோக்களின் கையில் கொடுத்தது. கொரோனா தொற்றுக்கு கோவிட் 19 வைரஸ்தான் காரணம் என்பதை அறிந்த அந்நாட்டு மருத்துவர்கள் நோயாளியின் ரத்தம், சளியை பரிசோதிக்க RT PCR, NAAT போன்ற நுட்பமான பரிசோதனை‌களை கையிலெடுத்து உடனுடக்குடன் சிகிச்சை அளித்தனர்.

கொரோனா ஓர் உயிர்கொல்லி. இதனை குணப்‌படுத்த மருந்துகளே இல்லை என உலகநாடுகள் கைவிரித்த நேரத்தில், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி, அவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா திரவத்தை பிரித்தெடுத்து நோய் எதிர்ப்பு சக்தியைக்கூட்டுவதற்காக கொரோனா தொற்‌றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்க சீனா, கையிலெடுத்திருக்கும் ஆயுதம் மூலிகை ஆராய்ச்சி. தற்போது ஃபேவிலாவிர் என்ற மருந்தை கொடுப்பதால் கொரோனா கட்டுக்குள் வரும் என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்துடன் குளோரோகுயின், ரெம்டெஸிவிர் ஆகிய இரண்டு மருந்துகளும் சோதனை முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்துவருவதால் நோய் கட்டுக்குள் வந்துள்ளதாக கூறுகின்றனர் சீன மருத்துவர்கள்.

கொரோனா வைரஸால் கொத்துக்கொத்தாக உயிர்கள் கொல்லப்பட்டாலும் சீனா எதிர்த்து போராடியதே தவிர எந்த நாடுகளின் உதவியையும் நாடவில்லை. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கவில்லை. எத்தகைய சூழலிலும் தளராது தொழில்நுட்பங்களாலும், புதிய ஆராய்ச்சிகளாலும் வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சீனா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com