\
4 நொடியில் தகர்ந்த பாலம்: வைரலாகும் வீடியோ

4 நொடியில் தகர்ந்த பாலம்: வைரலாகும் வீடியோ

4 நொடியில் தகர்ந்த பாலம்: வைரலாகும் வீடியோ
Published on

சீனாவில் மிக நீண்ட பாலம் ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. 4 நொடிகளுக்கும் குறைவாகவே இந்த பாலம் தகர்க்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. 

சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் சங்சுன் நதியின் குறுக்கே கடந்த 1978ஆம் ஆண்டு 150மீட்டர் நீளமும், 26மீட்டர் அகலமும் கொண்ட நன்ஹு என்ற மிக நீண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. 39 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம்  பழுதடைந்ததால் சில ஆண்டுகளாக போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மற்றொரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பழைய பாலத்தை சுமார் 700 கிலோ வெடிபொருட்களை பயன்படுத்தி 4 நொடிகளில் தகர்த்தனர். இதையடுத்து, தூசிகள் மற்றும் புகைமண்டலம் அப்பகுதியை சூழ்ந்தது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com