கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களில் முதல்முறையாக ஸீயின் கொள்கைகள்
கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களில் முதல்முறையாக சீனாவின் முன்னாள் அதிபர் ஸீ ஜின்பிங்-ன் கொள்கைகள் இணைக்கப்பட உள்ளன.
சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் கொள்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தங்களுடன் இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஸீ ஜின்பிங் எண்ணங்கள் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கொள்கைகள் 14 பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது தேசிய மாநாட்டில் இந்தக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஸின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவுடமை சீனாவைக் கட்டமைத்த மாவோவுக்குப் பிறகு, ஒரு தலைவரின் கொள்கைகள் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தங்களில் இணைக்கப்படுவது இதுவே முதல்முறையாகவும். புதிய யுகத்துக்கான சீனாவின் பண்புகளைக் கொண்டிருக்கும் பொதுவுடமைக் கொள்கைகள் என்று இவற்றை அழைக்கிறார்கள்.
சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் கொள்கைகளை மார்க்சீய கருத்துகளுடன் ஒருங்கிணைப்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. இந்த விவாதத்தின்போது பேசிய சீனப் பிரதமர் லீ கெகியாங், நவீனமயமாக்கப்பட்ட பொதுவுடமை சித்தாந்தங்களை உருவாக்கியதில் அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கு பெரும் பங்கு இருப்பதாகக் கூறினார். ஸீ ஜின்பிங்கின் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் கட்சியினருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.