
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கூண்டில் அடைபட்டிருந்த சிம்பன்சி ஒன்று 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளி உலகத்தை பார்த்து மகிழ்ந்துள்ளது.
28 வயதான வெண்ணிலா (Vannila) என்ற சிம்பன்சி ஆரம்ப காலத்தில் மருத்துவ ஆய்வு கூடத்தில் வளர்ந்துள்ளது. பிறகு கலிபோர்னியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த சரணாலயம் மூடப்பட்டதால், புளோரிடா சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக கூண்டிற்குள் அடைபட்டிருந்த சிம்பன்சி இப்போது திறந்துவிடப்பட்டுள்ளதால் வெளி உலகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!