\
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மாணவிகள் போராட்டத்தில் மோதல்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மாணவிகள் போராட்டத்தில் மோதல்

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மாணவிகள் போராட்டத்தில் மோதல்
Published on

சிலியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சிலி தலைநகர் சான்டியாகோவில் உள்ள இத்தாலி சதுக்கத்தில் நடந்த இந்த போராட்டத்தின் போது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து இனவாதத்தை பிரதிபலிக்கும் கொடும்பாவியை எரிக்க முயன்றபோது மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே கடும் மோ‌தல் வெடித்தது. ஆவேசமடைந்த மாணவர்கள் காவல்துறை வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்ததால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com