உலகம்
மெட்ரோ ரயில் கட்டண உயர்வு: சிலி நாட்டில் போராட்டம்
மெட்ரோ ரயில் கட்டண உயர்வு: சிலி நாட்டில் போராட்டம்
சிலி நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தலைநகர் சாண்டியாகோவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போராட்டக்காரர்கள் சாலைகளில் கார் டயர்களை எரித்ததால் அப்பகுதியே போர்க்களமானது.