பாலைவனத்தில் பூத்த வண்ண மலர்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்

பாலைவனத்தில் பூத்த வண்ண மலர்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்

பாலைவனத்தில் பூத்த வண்ண மலர்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்
Published on

சிலி நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பலவண்ண மலர்கள் பூத்துக்‍குலுங்கும் காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

தென் அமெரிக்‍க நாடுகளில் ஒன்றான சிலியில், அடகமா என்ற மிகப்பெரிய பாலைவனம் உள்ளது. கடல்போல் பரந்துவிரிந்து கிடக்‍கும் இந்த மணல்வெளியில் பல வண்ணங்களில் காட்டுச் செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. ஒரே நேரத்தில் இவை அனைத்தும் பூத்திருப்பதால், அந்தப் பாலைவனம் முழுவதும் மலர்ப்போர்வை போர்த்தியதுபோல்  காட்சி அளிக்‍கிறது. வழக்கமாக அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதங்களில் பூக்கும் இந்தப் பூக்கள் அண்மையில் இங்கு பெய்த மழையின் காரணமாக ஜுலை மாதத்திலேயே பூத்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு இதேபோன்று பூக்கள் பூத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com