\
சிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - மூவர் உயிரிழப்பு 

சிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - மூவர் உயிரிழப்பு 

சிலி நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - மூவர் உயிரிழப்பு 
Published on


சிலி நாட்டு தலைநகரில் அரசுக்கு எதிரான‌ போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

பொது போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து சாண்டியாகோ நகரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் நிலையங்களை சூறையாடியும், வாகனங்கள் மற்றும் கட்டடங்களுக்கு தீ வைத்தும் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். 

போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி காவல்துறையினர் அடக்க முயன்றனர். இதனால் சாண்டியாகோ நகரமே போர்க்களம் போல காட்சி அளித்தது‌. இதனை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கலவரத்தில் மூன்று பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com