சிலி அதிபர் தேர்தல்: வெற்றியை நெருங்கும் செல்வந்தர்!
சிலியில் நடந்த அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 67வயது செல்வந்தர் செபாஸ்டியன் பினேரா வெற்றி பெற்றுள்ளார்.
சிலியில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட வாக்குப்பதிவில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 67வயது செல்வந்தர் வெற்றி பெற்றுள்ளார். இவர் 37 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதால் மீண்டும் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது சுற்றில் 23 சதவிகித வாக்குகளை பெற்ற ஆளும் சோஷலிச கட்சியின் அலிஜாண்ட்ரோவை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.
சிலியின் அரசமைப்பு சட்டத்தின்படி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாததால் தற்போதைய அதிபர் பேச்லெட் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. வெளிநாடுகளில் வாழும் சிலி நாட்டவரும் வாக்களிக்க வசதியாக அதிபர் பேச்லெட் அண்மையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இதன் காரணமாக இந்தத் தேர்தலில் முதல் முறையாக வெளிநாடுகளில் வாழும் சிலி நாட்டவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.