அறுவை சிகிச்சைக்கு ரிமோட் காரில் செல்லும் சிறுவர்கள் - அமெரிக்க மருத்துவமனை புதிய உத்தி
அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய சான் டியாகோ மருத்துவமனை புதிய உத்தியை கடைப்பிடிக்கிறது.
தற்போது உள்ள கால கட்டத்தில் சுற்றுப்புற சூழல் மாற்றங்கள், உணவு பழக்க வழக்கங்களால் சிறுவர்களுக்கும் உடல்நலக்குறைவுகள் ஏற்படுகிறது. சிகிச்சையின்போது, ஊசி, மருந்துகள், மாத்திரைகள் எடுத்துக்கொண்ட போதிலும், ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு முன் சிறுவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் ஏற்படுகிறது.
எனவே, அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய சான் டியாகோ மருத்துவமனை புதிய உத்தியை கடைப்பிடிக்கிறது. அறுவை சிகிச்சை அறைக்கு சிறாரே ரிமோட் கண்ட்ரோல் காரில் செல்லும் வகையிலான வசதியை உருவாக்கி உள்ளனர். இதனால் சிறார் மற்றும் பெற்றோருடைய பதற்றம் தணிந்து காணப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.