லிபிய கடற்பகுதியில் மிகப்பெரிய படகு விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழப்பு

லிபிய கடற்பகுதியில் மிகப்பெரிய படகு விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழப்பு
லிபிய கடற்பகுதியில் மிகப்பெரிய படகு விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழப்பு

கடந்த வாரத்தில் மத்திய தரைக்கடலில் லிபிய கடற்பகுதியில், ஐரோப்பிய நாடுகளுக்கு ரகசியமாக இடம்பெயர்ந்த அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச இடம்பெயர் அகதிகள் அமைப்பு, ஜ்வாரா கடல்பகுதியில் படகின் என்ஜின் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் 37 பேர் உயிர் பிழைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதில் தப்பித்தவர்கள் அனைவரும் செனகல், மாலி, சாட் மற்றும் கானா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

படகு விபத்துக்குள்ளானதை அறிந்த உள்ளூர் மீனவர்கள் விரைந்து சென்று கடலில் மூழ்கியவர்களை மீட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். இதுபோன்று வேலை தேடி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இப்படி மிகச் சிறிய படகில் அளவுக்கு அதிகமான மக்களுடன் ரகசியமாக மேற்கொள்ளப்படும் நீண்ட கடற்பயணங்கள் துயரத்தில் முடிந்துவிடுகின்றன. எனவே இதுதொடர்பாக சர்வதேச இடம்பெயர் அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து மக்களை எச்சரித்துவருகின்றன.

செவ்வாய்க் கிழமையன்று, லிபிய கடற்பகுதியில் இருந்து செல்லும் ரப்பர் படகில் 100 பேர் பயணம் செய்வதாக லிபிய மற்றும் இத்தாலிய கடலோர காவல்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com