பாக். : திருடவில்லை என்பதை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கோடரியை நாக்கால் தொடச் செய்த கொடூரம்

பாக். : திருடவில்லை என்பதை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கோடரியை நாக்கால் தொடச் செய்த கொடூரம்
பாக். : திருடவில்லை என்பதை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கோடரியை நாக்கால் தொடச் செய்த கொடூரம்
பாகிஸ்தானில் திருட்டுப் பழியை போக்குவதற்கு பழுக்க காய்ச்சிய இரும்புக் கோடரியை நாக்கால் தொடச் செய்த கொடூரம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில் தகட் சுலைமான் தெஹ்சில் நகரம் அருகேயுள்ளது பலூச் பழங்குடியின கிராமம். இந்தக் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் மீது பக்கத்து வீட்டுக்காரர், கிராம பஞ்சாயத்தில் திருட்டுப் புகார் அளித்தார். புகாரை விசாரித்த பஞ்சாயத்தார், பாரம்பரிய வழக்கப்படி சிறுவன் திருடவில்லை என்பதை நிருபிக்க பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோடரியை நாக்கால் தொடுமாறு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, பழுக்க காய்ச்சிய இரும்புக் கோடரியை சிறுவன் நாக்கால் தொட்டபோது வலியால் அலறித்துடித்தார். இதுகுறித்து சிறுவனின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சிறுவனை கட்டாயப்படுத்திய சிராஜ், அப்துல் ரஹீம் மற்றும் முஹம்மது கான் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாக்கில் தீக்காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கிராமத்தில் புகாருக்குள்ளானவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க நெருப்பில் நடக்கச் சொல்வது, பழுக்கக் காய்ச்சிய இரும்புப் பொருளை நாக்கால் தொடச் செய்வது உள்ளிட்ட பரிட்சைகள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு செய்யும் நபர் காயமில்லாமல் இருந்தால் நிரபராதி எனவும் காயமடைந்தால் குற்றவாளி எனவும் இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com