\
விமானத்தில் ஒரே ஆள்: சீனாவில் இருந்து தனியாக சென்னை வந்த மாணவி!

விமானத்தில் ஒரே ஆள்: சீனாவில் இருந்து தனியாக சென்னை வந்த மாணவி!

விமானத்தில் ஒரே ஆள்: சீனாவில் இருந்து தனியாக சென்னை வந்த மாணவி!
Published on

சீனாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மருத்துவ மாணவி ஒருவர் மட்டுமே பயணித்தது தெரிய வந்துள்ளது.

எம்.வேலம் என்ற சென்னையை சேர்ந்த மாணவி சீனாவில் மருத்துவம் பயின்று வருகிறார். இவர் சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள டியாஞ்சின் (TIANJIN) நகரில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை தாயகம் திரும்பியுள்ளார்.

பல்வேறு விமான நிறுவனங்களும் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தியுள்ள நிலையில், அங்கிருந்த வந்த கடைசி நபர் இவராகத்தான் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. டியாஞ்சின்ல் இருந்து சிங்கப்பூர் வழியே வந்த விமானத்தில் இவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார்.

விமானத்தில்தான் மட்டுமே இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். சீனாவில் இருந்து மருத்துவ சேவையாற்ற எம்.வேலம் விரும்பியதாகவும் , தங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அவர் தாயகம் திரும்பியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com