இந்திய வம்சாவளி.. பெண்ணிய புரட்சியாளர்.. அமெரிக்க துணை அதிபர் கமலாவும்.. சென்னையும்!

இந்திய வம்சாவளி.. பெண்ணிய புரட்சியாளர்.. அமெரிக்க துணை அதிபர் கமலாவும்.. சென்னையும்!
இந்திய வம்சாவளி.. பெண்ணிய புரட்சியாளர்.. அமெரிக்க துணை அதிபர் கமலாவும்.. சென்னையும்!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. குறிப்பாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வெல்லும் சொற்களை மழையாகப் பொழிந்து விவாதங்களைத் தன்வசப்படுத்தும் திறன் பெற்றவர் கமலா தேவி ஹாரிஸ். அமெரிக்க அரசியலில் ஒரு பெண்ணிய புரட்சியாளர். தாம் ஒரு சுதந்திரமான பெண்; யாருக்கும் அஞ்சி முடங்கியிருப்பதில்லை என்று பல முறை உறுதியாகக் கூறியிருக்கிறார். எதிலும் கடைசியாக வந்துவிடக்கூடாது என்ற தனது தாயின் அறிவுரையைக் கடைப்பிடிப்பவர். இந்திய வம்சாவளி, குறிப்பாக சென்னைக்கும் அவருக்குமான உறவு என தமிழர்களோடு ஒன்றிணைந்துள்ளார் கமலா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com