\
ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு சந்திரிகா ஆதரவு

ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு சந்திரிகா ஆதரவு

ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு சந்திரிகா ஆதரவு
Published on: 

இலங்கை அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-வுடன் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூட்டணி சேர்ந்துள்ளார். இது தொடர்பாக கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் உடன்படிக்கை கையெழுத்தானது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அவரது கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதேசா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. 

கடந்த அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பவராக இருந்த சந்திரிகா குமாரதுங்கா, ரனில் விக்கிரமசிங்கே கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சஜித் பிராமதேசவை எதிர்த்து நிற்கும் பிரதான வேட்பாளர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே ஆவார்.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com