தென் ஆப்பிரிக்காவில் மாடல் அழகியை தாக்கி காயப்படுத்திய ஜிம்பாப்வே அதிபரின் மனைவி மீது ஜோனஸ்பர்க் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே-ன் 2-வது மனைவி கிரேஸ் முகாபே. இவர் தனது இரு மகன்களுடன் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்தார். ஜோனஸ்பர்க்-ல் உள்ள லோகன்ஸ் பார்க் ஓட்டலில் தங்கியிருந்தபோது கபிரியல்லா ஏஞ்சல்ஸ் என்ற 20 வயது மாடல் அழகியின் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார். தன்னுடைய மகன்களை சந்தித்து மாடல் அழகி பேசியதால் ஆத்திரம் அடைந்து கிரேஸ் முகாபே தாக்கியதாக கூறப்படுகிறது.
மாடல் அழகி கபிரியல்லா ஏஞ்சல்ஸ் அளித்த புகாரின் பேரில், ஜோன்ஸ்பர்க் போலீசார் முகாபே மனைவி கிரேஸ் மீது வழக்குபதிவு செய்தனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் கிரேஸ் முகாபே திடீரென ஜிம்பாப்வே திரும்பி விட்டார்.