\
Ceasefire Between US and Iran How Long to Recover
IRGC naval patrol at hormuz web

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் | நிலைமை சீராக எத்தனை நாட்கள் ஆகும்?

மேற்காசியப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், ஹார்முஸ் நீரிணை நெரிசல் மற்றும் பாதுகாப்பு சந்தேகங்கள் காரணமாக எரிபொருள் விநியோகம் வழக்கு நிலைக்கு திரும்ப தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
Published on

மேற்காசியப் போர் முடிவுக்கு வந்தாலும் அதன் பலன் சாமானிய மக்களை எட்ட சில மாதங்களுக்கு மேல் ஆகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஹார்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் சிக்கியுள்ள நிலையில், அவை வெளியே வந்து உரிய இடங்களுக்குச் செல்ல சில வாரங்களாவது ஆகும். மேலும் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பானது என கப்பல் நிறுவனங்களும் காப்பீட்டு நிறுவனங்களும் திட்டவட்டமாக உறுதிசெய்த பின்னரே புதிய கப்பல்கள் அதன் வழியே செல்லமுடியும்.

இவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் போரால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடங்கவும் சில வாரங்கள் பிடிக்கும். ஈராக்கில் இதற்கு ஓராண்டுகூட ஆகலாம் எனக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அது நிலையானதா என்பதை ஓரிரு மாதங்கள் காத்திருந்து உறுதிசெய்த பின்னரே நிறுவனங்கள் தங்கள் பணியை முழுவீச்சில் தொடங்கும். இதுபோன்ற காரணங்களால் எரிபொருள் உற்பத்தி, விநியோகம் சீரடைந்து கச்சா எண்ணெய் விலை குறைய சில மாதங்களாவது ஆகும் எனத் தெரிகிறது.

Ceasefire Between US and Iran How Long to Recover
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் | ஒப்பந்தத்தில் 14 அம்சத் திட்டங்கள்.. யாருக்குச் சாதகம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com