காவல்துறை வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிய வேன்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

காவல்துறை வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிய வேன்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

காவல்துறை வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிய வேன்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Published on

அமெரிக்காவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது வேகமாக வந்த வேன் ஒன்று பலமாக மோதியுள்ளது.

ஓஹியோ மாகாணத்தின் பிரதான சாலையில் காவல்துறை வாகனம் ஒன்று நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வேன் காவல்துறை வாகனம் மீது பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் குடிபோதையில் சாலையில் நிற்கும் வாகனத்தை கவனிக்காமல் விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த காவல்துறையினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காவல்துறை வாகனம் மீது, வேன் அதிவேகத்துடன் மோதும் காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை அமெரிக்க காவல்துறையினர் தற்போது வெளியிட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுருத்தியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com