கேட்டலோனியா வாக்கெடுப்புக்கு மதிப்‌பளிக்க வேண்டும்: கார்லஸ் வலியுறுத்தல்

கேட்டலோனியா வாக்கெடுப்புக்கு மதிப்‌பளிக்க வேண்டும்: கார்லஸ் வலியுறுத்தல்
கேட்டலோனியா வாக்கெடுப்புக்கு மதிப்‌பளிக்க வேண்டும்: கார்லஸ் வலியுறுத்தல்

தனி கேட்டலோனியா நாட்டுக்காக எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்புக்கு ஐரோப்பிய யூனியனும், ஸ்பெயினும் மதிப்பு அளிக்க வேண்டும் என பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பியூஜ்மோண்ட் வலியுறுத்தியுள்ளார்.

தனி நாடாக பிரிந்து செல்வதற்காக நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு முடிவுகளை ஏற்காத ஸ்பெயின் அரசு, அரசியல் குழப்பத்தை தவிர்க்க கேட்டலோனியாவுக்கு வழங்கி வந்த சுயாட்சி அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு, டிசம்பர் 21ஆம் தேதி‌ தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. அத்துடன் பெல்ஜியம் த‌ப்பிச் சென்ற கேட்டலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லஸ் பியூஜ்மோண்டுக்கு எதிராகவும் சர்வதேச கைது வாரண்ட் பிற‌ப்பித்தது. அதன்படி கைது செய்யப்பட்ட கார்லஸ்க்கு பெல்ஜியம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் பெல்ஜியத்தில் செய்தியாளர்களை சந்தித்த‌ கார்லஸ் பியூஜ்மோண்ட் பொதுவாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களித்த மக்களின் தீர்ப்புக்கு ஐரோப்பிய யூனியனும், ஸ்பெயின் அரசும் மதிப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்‌தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com