அமெரிக்காவில், அதி வேகத்தில் சென்ற கார், அடுக்குமாடி வீட்டின் 2 ஆவது மாடியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கலிஃபோர்னியாவின் பிரதான சாலையில், காலை 5.25 மணிக்கு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள 17 ஆவது டெண்டல் சாலையில் கார் நுழைய முயன்றபோது, எதிரில் வந்த வாகனத்தில் மீது மோதி, திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளில் வருவது போல் ஆகாயத்தில் பறந்து, எதிரில் இருந்த அடுக்குமாடி வீட்டின் 2 ஆவது மாடியில் போய் மோதியது.
தகவலறிந்து, விபத்து பகுதிக்கு வந்த தீயனைப்பு துறையினர், காரில் இருந்த 2 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், காரை ஓட்டிய ஓட்டுநர், மது அருந்திவிட்டு இத்தகைய விபத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் 2 ஆவது மாடியில், அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.விபத்து ஏற்பட்ட போது, அலுவலகத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரிய அசாம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், குடியிருப்பின் 2 ஆவது தளம், முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.