கேன்ஸ் திரைப்பட விழா - நடுவர் குழுவில் தீபிகா படுகோனே

கேன்ஸ் திரைப்பட விழா - நடுவர் குழுவில் தீபிகா படுகோனே

கேன்ஸ் திரைப்பட விழா - நடுவர் குழுவில் தீபிகா படுகோனே
Published on

அடுத்த மாதம் நடைபெறவுள்ள 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் இந்திய நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். உலகம் முழுவதும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படங்களை ஆய்வு செய்து, ஆகச்சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து விருது வழங்குவதே கேன்ஸ் திரைப்பட விழாவின் நோக்கம் ஆகும்.

அந்த வகையில், மே 17 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்படும் படங்கள் திரையிடப்படும். அவற்றில் இருந்து ஒரு சிறந்த படம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கு விருது வழங்கப்படும். சிறந்த திரைப்படத்தை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் இந்திய நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்றுள்ளார்.

நடிகைகள் ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் ஆகியோரும் கடந்த காலங்களில் இக்குழுவில் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com