\
பிரான்ஸில் கேன் திரைப்படத் திருவிழா தொடக்கம்

பிரான்ஸில் கேன் திரைப்படத் திருவிழா தொடக்கம்

பிரான்ஸில் கேன் திரைப்படத் திருவிழா தொடக்கம்
Published on: 

உலகில் மிகப் பிரபலமான கேன் திரைப்படத் திருவிழா பிரான்ஸ் நாட்டில் தொடங்கி உள்ளது.

74-ஆவது ஆண்டாக நடைபெற உள்ள இவ்விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் தயாரான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. விழாவில் கொரோனா தடுப்பு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.

முத்தமிடுவது, அணைப்பது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கேன் திரைப்பட விழா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரான்சில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இவ்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com