காலிஸ்தான் ஆதரவு தலைவர் கொல்லப்பட்ட விவகாரம் - கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ விளக்கம்

“காலிஸ்தான் ஆதரவு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டுவது எனது எண்ணமில்லை. அந்த விவகாரத்தை இந்தியா சரியாக கையாள வேண்டும் என்பதே எனது விருப்பம்” என கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ விளக்கம் அளித்துள்ளார்.
Canadian Prime Minister Justin Trudeau
Canadian Prime Minister Justin Trudeaupt desk

கனடாவில் சீக்கிய குருத்வாராவிற்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டீன் ட்ரூடோ, இந்திய அரசின் முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

Hardeep singh Nijjar
Hardeep singh Nijjarpt desk

இதற்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரை வெளியேறும்படி கூறியது.

Canadian Prime Minister Justin Trudeau
இந்தியா - கனடா உறவில் விரிசல்?

இதனிடையே, “காலிஸ்தான் ஆதரவு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டுவது எனது எண்ணமில்லை. அந்த விவகாரத்தை இந்தியா சரியாக கையாள வேண்டும் என்பதே எனது விருப்பம்” என கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ விளக்கம் அளித்துள்ளார். கனடா அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டால் இந்தியாவுடனான தற்போதைய வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com