இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தீபாவளி. ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, மனதில் இருக்கும் இருட்டை விலக்க, வெளிச்சம் கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கிருஷ்ணன், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
இந்த வருட தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இந்துக்கள் அதிகம் வாழும் கனடாவில் நடந்த தீபாவளி விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ கலந்துகொண்டார். ஒட்டாவாவில் நடந்த இந்த விழாவில் இந்திய தூதர் விகாஷ் ஸ்வரூப் மற்றும் ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டனர்.