கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு பங்குண்டு... தமிழில் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர்..!

கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு பங்குண்டு... தமிழில் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர்..!

கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு பங்குண்டு... தமிழில் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர்..!
Published on

கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு என கனடா பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசத் தொடங்கிய அவர், தமிழர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு தாங்கள் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தின் சார்பில் தமிழர்களுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com