கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை அச்சம் அளிக்கிறது:கனடா பிரதமர் கவலை

கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை அச்சம் அளிக்கிறது:கனடா பிரதமர் கவலை

கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை அச்சம் அளிக்கிறது:கனடா பிரதமர் கவலை
Published on

வடகொரியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில், சர்வதேச சமூகம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், ஃபார்ட்ச்சுன் என்ற பத்திரிகை மிக வலிமை வாய்ந்த பெண்களுக்கான கருத்தரங்கு கூட்டத்தை நடத்தியது. இதில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்று கவலை தெரிவித்தார். பெண் உரிமை பற்றி பேசிய அவர், அரசியலுக்கு அதிக அளவில் பெண்கள் வருவதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் வடகொரியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் சர்வதேச சமூகம் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com