கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகள் அனைத்தையும் கடும் அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த விவகாரத்தை மிகவும் கவனத்துடன் அணுகுமாறு அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, தனது மனைவி சோஃபிக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரிட்டனில் இருந்து திரும்பிய சோஃபிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார்.
மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ட்ரூடோ அதுவரை வீட்டில் இருந்தே பணியாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.