உலகம்
'கொரோனா பாதிப்பு இருப்பதுபோல் உணர்ந்தேன்; தனிமைப்படுத்திக் கொண்டேன்' - கனடா பிரதமர்
'கொரோனா பாதிப்பு இருப்பதுபோல் உணர்ந்தேன்; தனிமைப்படுத்திக் கொண்டேன்' - கனடா பிரதமர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்வதாக கூறியிருக்கிறார்.
கொரோனா பாதிப்பு இருப்பதாக சுய உணர்வு ஏற்பட்டதால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன்னை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார்.
இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நேற்று இரவு, எனது கோவிட்-19 தொற்று பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லையென தெரிந்தது. எனது ரேபிட் கிட் சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஆகவே சுகாதாரத்துறையின் விதிகளை பின்பற்றி ஐந்து நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக்கொள்கிறேன். நான் தற்போது ஆரோக்கியமான உடல்நிலையுடன் உள்ளேன். அதனால் வீட்டிலிருந்து பணிபுரிய உள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்” என தெரிவித்துள்ளார்