\
மீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

மீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

மீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
Published on

கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

338 உறுப்பினர்களை கொண்ட கனடா மக்களவைக்கு தேர்தல் ‌நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றுள்ளது. 

லிபரல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் சிறு கட்சிகளுடன் இணைந்து ஜஸ்டின் ட்ரூடோ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார். இந்த தேர்தல் வெற்றியை லிபரல் கட்சியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அடுத்த 4 ஆண்டுகளுக்கு 47 வயதான ஜஸ்டின் ட்ரூடோவே கனடாவின் பிரதமராக நீடிக்க போகிறார். எனினும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ட்ரூடோவின் செல்வாக்கு குறைந்திருப்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com