இளைஞர்களின் ரத்தத்தால் முதுமைக்கு பாய் பாய் சொல்லும் முதியவர்கள்

இளைஞர்களின் ரத்தத்தால் முதுமைக்கு பாய் பாய் சொல்லும் முதியவர்கள்

இளைஞர்களின் ரத்தத்தால் முதுமைக்கு பாய் பாய் சொல்லும் முதியவர்கள்
Published on

வயதானவர்கள் தங்கள் இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை செலுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், வயதாவதை தவிர்க்க, இளைஞர்களின் ரத்தத்தை வயதானவர்களின் உடலில் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது. வயதானவர்கள் தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக் கொள்வதன் மூலம் உத்வேத்துடன் செயல்படலாம் எனவும் அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. ஆய்வில் பங்கேற்க 8,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் அன அந்நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். 

ஆய்வில் பங்கேற்ற முதியவர்களின் உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா திரவம் செலுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் பங்கேற்ற முதியவர்கள் உடல் மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சை முதியவர்களின் தோற்றம், நீரிழிவு நோய், இதய செயல்பாடு மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இளமையை மீட்க முடியுமே தவிர இந்த புதிய வகை சிகிச்சை சாகாவரத்தை அளிக்கும் என உறுதியாக சொல்ல முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய மருத்துவ முறையானது ஸ்டாம்போர்டு பல்கலைகழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்தது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com