இனி ரஷ்யாவை தொட்டுக்கூட பார்க்க முடியாது? வடகொரியா கொடுத்த ரகசிய அஸ்திரம்! ரெடியாகும் பயங்கர Plan?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
வடகொரியாவிடம் இருந்து KN-30 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்றுள்ளதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவலை உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை வியாழக்கிழமை வெளியிட்டதாக Ukrainska Pravda செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் உளவுத்துறையின் தகவலின்படி, 2026 ஜூலை நிலவரப்படி, ரஷ்யாவிடம் சுமார் 50 Kinzhal ஏரோபாலிஸ்டிக் ஏவுகணைகளும், அதே அளவில் வடகொரியாவின் KN-23, KN-24 மற்றும் KN-30 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்யா KN-30 ஏவுகணைகளை வடகொரியாவிடம் இருந்து பெற்றுள்ளதாக வெளியான முதல் தகவல் இதுவாகும்.
ஏற்கனவே, உக்ரைன் மீதான தாக்குதல்களில் வடகொரியாவின் KN-23 மற்றும் KN-24 ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடம் 600-க்கும் மேற்பட்ட Onyx, 450-க்கும் மேற்பட்ட Kalibr, 120-க்கும் மேற்பட்ட Zircon மற்றும் சுமார் 130 Iskander-M ஏவுகணைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவத் தொழில்துறை மாதத்திற்கு 200-க்கும் மேற்பட்ட க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KN-30 என்பது வடகொரியாவின் Hwasong-11C அல்லது Hwasong-11Da ஏவுகணைக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய பெயராகும். இது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை வகையை சேர்ந்தது. திட எரிபொருள் இயந்திரத்தைக் கொண்ட இந்த ஏவுகணை, மொபைல் தரை ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. 2021 மார்ச் 25-ல் நடைபெற்ற முதல் சோதனையில், குறைந்தது 600 கி.மீ. தொலைவு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், ரஷ்யாவின் Voronezh பகுதியில் இருந்து உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்த வடகொரியா ஏவுகணைப் பிரிவை நிலைநிறுத்தியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது.

