“காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்” - ட்ரம்ப் மீண்டும் பேச்சு

“காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்” - ட்ரம்ப் மீண்டும் பேச்சு

“காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்” - ட்ரம்ப் மீண்டும் பேச்சு
Published on

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதால், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் தாம் நிச்சயம் உதவ தயாராக இருப்பதாகவும், அதே சமயம், இந்தியாவும் இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய பிரதமர் மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் தமக்கு நல்ல நட்புறவு இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் தம்மால் நிச்சயம் நல்ல மத்தியஸ்தராக இருக்க முடியும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com