71 கண்ணிவெடி; 38 வெடிப்பொருட்கள்; மோப்ப சக்தியால் கண்டுபிடித்து அசத்திய எலி உயிரிழப்பு

71 கண்ணிவெடி; 38 வெடிப்பொருட்கள்; மோப்ப சக்தியால் கண்டுபிடித்து அசத்திய எலி உயிரிழப்பு

71 கண்ணிவெடி; 38 வெடிப்பொருட்கள்; மோப்ப சக்தியால் கண்டுபிடித்து அசத்திய எலி உயிரிழப்பு
Published on

கம்போடியாவில் நில கண்ணிவெடிகளை தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்து வந்த எலி உயிரிழந்தது.

தாண்சானியாவில் பிறந்த ஆப்ரிக்க வகை எலியான "மெகாவா"விற்கு கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டு, கம்போடியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிப்பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டறிந்த மெகாவா கடந்த 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றது.

இந்த நிலையில், எட்டே வயதான மெகாவா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அதை பராமரித்து வந்த தன்னார்வல மையம் கூறியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com