ஒரே வாரத்தில் 2 லாட்டரி.... கோடீஸ்வரி ஆன இளம் பெண்

ஒரே வாரத்தில் 2 லாட்டரி.... கோடீஸ்வரி ஆன இளம் பெண்

ஒரே வாரத்தில் 2 லாட்டரி.... கோடீஸ்வரி ஆன இளம் பெண்
Published on

அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கு ஒரே வாரத்தில் 2 லாட்டரி டிக்கெட்டுகளில் பல லட்சம் டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.  

கலிபோர்னியாவை சேர்ந்த ரோசா டோமின்க்யூ என்ற பெண் தன் வீட்டிற்கு காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது தமது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், அரிசோனாவில் உள்ள ஒரு லாட்டரி கடையில் 5 டாலர் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதன் பின்னர், 2 நாட்கள் கழித்து மீண்டும் கலிபோர்னியாவின் கேஸ் ஸ்டேஷன் பகுதியில் 2 வது லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியுள்ளார்.

முதல் தடவை அவர் வாங்கி லாட்டரி டிக்கெட்டிற்கு 555,000 டாலர்களும், 2 வது முறை அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 100,000 டாலர்களும் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த இரண்டு பரிசுத்தொகையும் ரோசா டோமின்க்யூவிற்கு விழுந்ததை தொடர்ந்து ஒரே நிமிடத்தில் அவர் 6லட்சத்து 55ஆயிரத்து 555 டாலர்களுக்கு சொந்தக்காரர் ஆனார். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 4 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரமாகும். இதுகுறித்து ரோசா கூறுகையில், 2 லாட்டரி டிக்கெட்டில் பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த பணத்தில் எனக்கு பிடித்த கார் ஒன்றினை வாங்க முடிவு செய்துள்ளேன் என கூறினார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com