“2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கு திரும்பும்” - பில் கேட்ஸ்

“2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கு திரும்பும்” - பில் கேட்ஸ்

“2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கு திரும்பும்” - பில் கேட்ஸ்
Published on

வரும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கும் திரும்பும் என உலகின் முதல் நிலை செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இது ஒரு எதிர்பார்த்திராத சோகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

“எதிர்வரும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலக மக்களின் வாழ்க்கை மீண்டும் பழையபடி சகஜ நிலைக்கு திரும்பும் என நான் நம்புகிறேன். இந்த பெருந்தொற்று நோய் நமது மனதில் பதிந்துள்ள ஆறாத ரணம். இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கொரோனாவை தடுக்கும் வல்லமை கொண்ட தடுப்பு மருந்துகள் வந்திருப்பது தான்” என அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. அண்மைய சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு பல மாநிலங்களில் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com