நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 14 பேர் பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு ராஜ்பிராஜ் என்ற இடத்தில் இருந்து பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இந்த பேருந்து, தாடிங் மாவட்டத்தில் உள்ள கட்பேசி பாங்கே என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி, திருசுளி ஆற்றில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் இருந்தவர்களில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 14 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். இன்னும் சிலர் இறந்திருக்கலாம் என்றும் பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் கிடைக்கவில்லை என்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.