''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்!

''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்!
''யானை தனி; தும்பிக்கை தனி'' - உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்!

தென் ஆப்பிரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த ஒரு புகைப்படம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்குச் சென்ற ஆவணப்பட இயக்குநரான ஜெஸ்டின் சுல்லிவான் தன்னுடைய ட்ரோன் கேமராவை வனத்துக்கு மேலே பறக்கவிட்டு படம் பிடித்துள்ளார். அப்போது அவர் படம் பிடித்த ஒரு புகைப்படம் இன்று உலக அரங்கையே அதிரச் செய்துள்ளது. யானை ஒன்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தும்பிக்கை தனியாக வெட்டி வீசப்பட்ட நிலையில் இறந்துகிடந்த புகைப்படம் தான் ஜெஸ்டின் தன் கேமரா மூலம் பதிவு செய்தது. 

இது குறித்து இங்கிலாந்தின் மெட்ரோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டிஸ்கனக்ஷன் (Disconnection) என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட அந்த யானையின்புகைப்படம் தற்போது ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்படப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. அந்த புகைப்படம் அப்பகுதிவாசிகளை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களையும் கலங்கச்செய்துள்ளது. 2014 முதல் 2018ம்  ஆண்டுக்குள் உடல் பாகங்களுக்காக விலங்குகள் கொல்லப்படுவது 593 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய ஆவணப்பட இயக்குநர்  ஜெஸ்டின் சுல்லிவான், ’’இந்தப்புகைப்படத்துக்கு டிஸ்கனக்ஷன் என பெயரிட்டுள்ளேன். தரையில் நின்று கொண்டு பார்த்தால் இதன் வீரியம் புரியாது. மேலே இருந்து பார்த்தால் தான் புகைப்படத்தின் வலி புரியும். டிஸ்கனக்ஷன் என்பது யானைக்கும் துண்டித்து கிடக்கும் தும்பிக்கைக்கும் இடையேயானது மட்டும் அல்ல. விலங்குகள் கொலைக்கும் அதை கண்டுகொள்ளாத நமக்கும் இடையேயாயானது’’ என்று தெரிவித்துள்ளார்.

போட்ஸ்வானாவில் 5 வருடங்களாக அமலில் இருந்த யானைகளை வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த மாதம் திரும்ப பெறப்பட்டது. இதனால் யானைகளை கொல்வது அங்கு குற்றமாகாது. ஆனாலும் விலங்குகள் வேட்டை என்பது காலப்போக்கில் வனத்தையும் நாட்டையும் சீரழித்துவிடும் என விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com