british women who changed her name to cant get a passport
புட்சி பியர்எக்ஸ் தளம்

பிரிட்டிஷ் | பெயரை மாற்றிய பெண்.. பாஸ்போர்ட் கிடைக்காத சோகம்!

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் பெயரை மாற்றிக்கொண்டதால் பாஸ்போர்ட் பெற முடியாமல் தவிக்கும் நிலை பேசுபொருளாகி உள்ளது.
Published on

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் எய்லீன் டி பாண்ட் (Eileen De Bont). 53 வயதான இவர், கடந்த 2009ஆம் ஆண்டு தேசியத் தொண்டு நிறுவனத்திற்காக பணம் திரட்டினார். அதற்காக தனது பெயரை புட்சி பியர் (Pudsey Bear) என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். ஆனால், அந்தப் பெயர்தான் தற்போது அவருக்கு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.

2009ஆம் ஆண்டில் பாஸ்போர்ட்டிற்கு Eileen De Bont விண்ணப்பித்தபோது, உள்துறை அலுவலகம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, பதிப்புரிமைச் சட்டங்களை மீறியதாக மீண்டும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மீண்டும் தொடர்வதற்கு முன்பு, பதிப்புரிமை உரிமையாளரிடம் அனுமதி பெறுமாறும் உள்துறை அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

british women who changed her name to cant get a passport
புட்சி பியர்x page

இதுகுறித்து புட்சி பியர், "நான் இருப்பதுபோல் இருக்க அவர்கள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். எனது அனைத்து பில்கள், எனது வங்கி விவரங்கள், எனது உள்ளூர் சுகாதார அறக்கட்டளை எல்லாவற்றிலும் எனது புதிய பெயர் ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் பாஸ்போர்ட் அலுவலகம் மட்டுமே ஏற்கவில்லை.

16 ஆண்டுகளாக என் பெயர் எல்லா இடத்திலும் இப்படியே உள்ளது. எனவே, அதையே என் பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்திலும் வைக்க விரும்புகிறேன். ஆகையால், எனது பெயரை மீண்டும் மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்" என தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், கவுன்சில் ஆவணங்களில் அவரது புதிய பெயர் இடம்பெற்றுள்ளதைத் தவிர, யூடியூப்பில் 32,000 சந்தாதாரர்களைக் கொண்ட நார்தர்ன் லைட் டாரோட் என்று அழைக்கப்படும் பியரின் டாரோட் வாசிப்பு வணிகம், புட்ஸி பியரின் கீழ் கம்பெனிகள் ஹவுஸில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து உள்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், "அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பங்களும் அவற்றின் தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

british women who changed her name to cant get a passport
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் | முதல் இடத்தில் UAE.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com