‘உடலில் எங்கு பார்த்தாலும் டாட்டூ’- இளைஞருக்கு குவியும் வேலைவாய்ப்பு

‘உடலில் எங்கு பார்த்தாலும் டாட்டூ’- இளைஞருக்கு குவியும் வேலைவாய்ப்பு
‘உடலில் எங்கு பார்த்தாலும் டாட்டூ’- இளைஞருக்கு குவியும் வேலைவாய்ப்பு

தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் சுமார் 90% டாட்டூ குத்திக் கொண்டுள்ளார் பிரிட்டிஷ் நாட்டுக்காரர் ஒருவர். இப்போது அதன் காரணமாக வேலைவாய்ப்பு குவிந்த வண்ணம் இருந்துள்ளது. 41 வயதான கரக் ஸ்மித் தான் அந்த மனிதர். 

“18 வயது முதல் டாட்டூ குத்தும் வழக்கத்தை கொண்டுள்ளேன். முதலில் விளையாட்டாக தொடங்கியது. ஒரு கட்டத்தில் அப்படியே பேஷனாக மாறியது. இப்போது எனது உடலில் பெரும்பாலான பகுதிகளில் டாட்டூ உள்ளது. 

எனது டாட்டூக்களை பார்த்து நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். ‘உன்னிடம் நான் சவால் விடுகிறேன். உனக்கெல்லாம் வேலையே கிடைக்காது’ என சொல்லியவர்களும் உண்டு. எனக்கு குழந்தையே பிறக்காது எனவும் சொல்லியவர்கள் உண்டு. சிலர் இனவெறி ரீதியாகவும் என்னை கமெண்ட் செய்துள்ளனர். அதையெல்லாம் கடந்து தான் வந்துள்ளேன். 

ஒரு கட்டத்தில் நான் உடலில் குத்திக் கொண்ட டாட்டூ காரணமாக ஒரே வாரத்தில் சுமார் 7 வேலைவாய்ப்புகள் எனக்கு வந்துள்ளது. டிவி, மாடலிங் துறையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனது உடலில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள டாட்டூ குத்திக் கொண்டுள்ளேன்” என சிலிர்க்கிறார் அவர். 

4 குழந்தைகளுக்கு தந்தையான அவர் 18 வயது முதலே வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com